Monday, August 1, 2011

படித்ததில் பிடித்தது....ஓஷோவின் வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள் புத்தகத்திலிருந்த்து...

விழிப்புணர்வு மிக்க மனிதன் என்ன செய்வான் என்பதை முன் கூட்டியே சொல்ல முடியாது. ஏனெனில், அவன் உங்கள் செயலுக்கு ஏற்ப, எதிர் செயல் என்று எதுவும் செய்வது இல்லை. ஒவ்வோரு தருணமும் அவனுக்கு புதுமையாகவே இருக்கும்.  அவன், ஒருக்காலும் செய்த செயலுக்கு ஏற்ப, வேறு செயல் செய்வது இல்லை. அவனுடைய செயலில் இறந்த காலச் சாயல் எதுவும் இருக்காது. அந்த நேரத்துக்கு ஏற்றபடி, அவன் உள் உணர்வின் கட்டளைப் படி அவன் செயல் படுவான். அதே போல, அடுத்த கணம், அதே சந்தர்ப்பத்தில் செயல்பட மாட்டான். ஏனெனில், உயிர்த்தன்மையின் இயல்பு மாறிக் கொண்டே இருக்கும். அதற்கு ஏற்றாற்போல், அவன் செயல் புரிகிறான்.  உங்களது சுயநினைவற்ற செயலைப்போல, பிரக்ஞையற்ற செயலைப் போல, மற்றவை அனைத்தும் ஒரேநிலையில் எப்போழுதும் இருப்பதில்லை. இந்த இயந்திரத்தனமான மனநிலையில் செய்யும் காரியம் அனைத்தும் நிலையானவை, முன்பே அறிந்து கொள்ளக் கூடியவை. அதில் உயிர்த்தன்மை எதுவும் இருக்காது.

No comments:

Post a Comment