Monday, August 8, 2011

Review of Brain Book

This is one of the rare books I have read about BRAIN
Even though ARIVU-(KNOWLEDGE) is a Tamil Magazine
this article should have been translated into tamil before pub-
lishing. I will be giving a brief translation of the matter very soon.
In the meantime I want my Arivou readers to go through the article 
as early as possible.There is a mistake in the placement of the articles
pages, the lastpage(9) should have followed by page(7).This
article is printed in small letters;but you could bring it to larger  size by
clicking  in the middle of each page. 









Tuesday, August 2, 2011

கதிர்காமம் கோவில் யாத்திரை...28/07/2011

கதிர்காமம் முன்வாசல்
கதிர்காமம்
தென்னிலங்கையின் நடுப்பகுதியில், மலைகளும், காடுசூழ்ந்துள்ள இடத்தில்
மாணிக்க கங்கை தழுவிச் செல்லும் வனப்புறு திருநகரில்
எழுந்தருளியுள்ளார் கதிர்காமக்கந்தன்.இக்கந்தப் பெருமாள் காவல்
தெய்வம் என்பது ஆராய்சியாளர்களின் முடிவு. பிள்ளையார் மலை,
வீரபாகு மலை தெய்வானை மலை வள்ளியம்மை மலை ஆகிய
மலைகளின் நடுவே சந்திரன், சூரியன், அக்னியாகிய முச்சுடர்களின்
சோதி பெற்று உலகுக்கெல்லாம் பேரொளியாய் விளங்குவது கதிர
மலை. கதிரமலையில் வள்ளி தெய்வானை சமேதராய் எழுந்தருளி
யுள்ளார் கதிகாமக்கந்தன் என்று தக்ஷனகைலாய புராணம் கூறுகிறது. 
யாழ்பாண வைபவமாலை, மகாவம்சம் ஆகிய நூல்களில் கதிர்கா
மம் பற்றிய குறிப்புக்கள் உண்டு.கதிர்காமக்கந்தனின் சந்நிதி தெற்க்கு
நோக்கியும், வள்ளியம்மையின்சந்நிதி வடக்கு நோக்கியும், தெய்வானை
அம்மையின் சந்நிதி கிழக்கு நோக்கியும் அமைந்திறுக்கின்றன. வள்ளி
அம்மையருக்கு அடிமை பூண்ட முத்துலிங்கசுவாமி சந்நிதி, மாணிக்க
கங்கையைக் கடந்துவரும் அடியார்களை அன்புடன் உபசரித்து முருக
னிடம் ஆற்றூப்படுத்தும் கருத்துடன் மேற்க்கு திசையை நோக்கி 
அமைந்திருக்க்கிறது. அத்தோடு பக்க்தர்களால் வணங்கப்படும்பிள்ளை
யார், பெருமாள், வைரவர் ஆகியோருக்கான சந்நிதிகளும் இங்குண்டு.
பௌத்த வ்ழிபாட்டுக்கான கிரி விகாரையும்,இஸ்லாமியருக்கான பள்ளி
வாசலும் இங்கு இருப்பது நோக்கற்பாலது.



இன்றைய கதிர்காமம் இடமிருந்து வலமாக புத்தர் கோவில், பிள்ளையார் கோவில், முருகன் கோவில்

பாபாஜி 1800 வருடங்களுக்கு முன் தீட்சை பெற்ற கல்வெட்டு
இந்த கல்வெட்டில் பொறிக்க பட்டுள்ள ஆங்கில வாசகங்கள்...

"At this sacred spot round about 219 A.D. in the sixteenth year Bala Babaji Nagaraj was initiated into yoga sidhantham by the great siddha of science Boganathar. Babaji experienced  Muruga here and became aware of the fact that he is an Avatar of Muruga."
அன்றைய கதிர்காமம் பிள்ளையார் கோவிலும் முருகன் கோவிலும் மட்டும்.

Monday, August 1, 2011

படித்ததில் பிடித்தது....ஓஷோவின் வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள் புத்தகத்திலிருந்த்து...

விழிப்புணர்வு மிக்க மனிதன் என்ன செய்வான் என்பதை முன் கூட்டியே சொல்ல முடியாது. ஏனெனில், அவன் உங்கள் செயலுக்கு ஏற்ப, எதிர் செயல் என்று எதுவும் செய்வது இல்லை. ஒவ்வோரு தருணமும் அவனுக்கு புதுமையாகவே இருக்கும்.  அவன், ஒருக்காலும் செய்த செயலுக்கு ஏற்ப, வேறு செயல் செய்வது இல்லை. அவனுடைய செயலில் இறந்த காலச் சாயல் எதுவும் இருக்காது. அந்த நேரத்துக்கு ஏற்றபடி, அவன் உள் உணர்வின் கட்டளைப் படி அவன் செயல் படுவான். அதே போல, அடுத்த கணம், அதே சந்தர்ப்பத்தில் செயல்பட மாட்டான். ஏனெனில், உயிர்த்தன்மையின் இயல்பு மாறிக் கொண்டே இருக்கும். அதற்கு ஏற்றாற்போல், அவன் செயல் புரிகிறான்.  உங்களது சுயநினைவற்ற செயலைப்போல, பிரக்ஞையற்ற செயலைப் போல, மற்றவை அனைத்தும் ஒரேநிலையில் எப்போழுதும் இருப்பதில்லை. இந்த இயந்திரத்தனமான மனநிலையில் செய்யும் காரியம் அனைத்தும் நிலையானவை, முன்பே அறிந்து கொள்ளக் கூடியவை. அதில் உயிர்த்தன்மை எதுவும் இருக்காது.

Sunday, July 31, 2011

அறிவு

                                               உங்களுடன் ஒரு நிமிடம்
                        இன்று (31.07.2011) ஒன்றரை ஆண்டுகளாக வெளிவராத அறிவு சஞ்சிகைக்கு ஈடாக இந்த Blogging மூலம் மீண்டும் வெளிவருகிறது.  அறிவு கடைசி இதழில் விடுத்த வேண்டுகோளுக்கு சுமார் 60 பேரே பதில் அனுப்பி இருந்தனர்.அதனால் அறிவு வெளிவரவில்லை.
                  நான் அறிந்தவற்றை பிறருடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கில்
அறிவு வெளியிடப்பட்டது. பண நெருக்கடியாலும் வினியோகம் செய்வதில் கஷ்டம் ஏற்பட்டதாலும் அறிவு வெளி வருவது தடைப்பட்டது.
               
 புது முயற்சியாயக இப்போதைக்கு இந்த ரூபத்தில் எனது கருத்துக்களை தெரிய படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்

Dr S P இராமச்சந்திரா

புது முயற்சி...

அன்பின் அனைவர்க்கும்...

அப்பாவுக்காக... அப்பாவின் எழுத்து பசியைப் போக்க என்னாலான சிறு முயற்சி.
கடந்த தினங்களில் அப்பாவுடன் கதைத்துக் கொண்டு இருக்கும் போது... அப்பாவின் மனதில் தன்னுடைய அறிவு பத்திரிக்கை பணியை தொடர முடியாதிருப்பதின் அதிருப்தியை என்னால் உணர முடிந்தது... அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்த பொழுது எனக்கு உதித்த உபாயம்(Idea)  தான் இந்த Blogging ( Blogging க்கு என்ன தமிழ்).

இன்று இந்த Blogging பற்றி அப்பாவுக்கு சொல்லிகொடுக்க போகின்றேன்.
இனி உங்கள் அனைவருடனும் அப்பா இந்த Blogging மூலம் தொடர்பில் இருப்பார்.. இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.